குழந்தைகளின் நினைவாற்றலை கூர்மைப்படுத்தி படிப்பில் சிறந்தவர்களாக எளிதில் மாற்றலாம். புத்தகத்தில் உள்ள விஷயங்களை, வேடிக்கையான முறையில் கற்றுக்கொடுங்கள். அறிவியல் அருங்காட்சியகம், கலைக்கூடம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று விளக்கிக் காட்டுங்கள். ஒரு விஷயத்தை காட்சிப்படுத்துவதன் மூலம், வேகமாக நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் அதிகரிக்கும்.