குரோம்பேட்டையை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் தீவிர விநாயகர் பக்தரான இவர் 17 ஆண்டாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் கணேஷ் மகாலில் அரை அங்குலம் முதல் ஆறு அடிவரையிலான, விநாயர்கர் சிலைகள், மண் சிற்பங்கள், தங்கம், வெள்ளி, பவளம், பல்வேறு அறிய படங்கள் என 20 ஆயிரம் விநாயகர்களை கண்காட்சியாக மூன்று அடுக்கு கட்டிடன் முழுவதும் காட்சி படுத்தியுள்ளார். இந்த கண்காட்சியை விநாயகர் சதுர்த்தி தினம் முதல் 28ம் தேதி வரை 11நாட்கள் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் பொதுமக்கள் கண்காட்சியை பார்க்க இலவசமாக அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இந்தியா சந்திரனின் தென்துருவத்தில் வின்கலத்தை இரக்கி சாதனை புரிந்ததை கொண்டாடும் வகையில் சந்திரயான் பிள்ளையார் காட்சிகளுடன் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
ஏழரை அடி உயரத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்திவரதர் விநாயகர் சிலை வைக்கபட்டுள்ளது.
ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர், விநாயகரின் சயன திருக்கோலத்தில் பல்வேறு வடிவங்களில் 200 சிலைகள் இடம் பெற்றுள்ளது.
5 அடி உயர தங்க நிற யானையில் விநாயகர் சிவனுக்கு பூஜை செய்யும் சிலை, விநாயகர் அலங்கார சிலைகள், சந்தனத்தில் செய்யப்பட்ட திண்டு விநாயகர், கண்ணாடி மாளிகையில் விநாயகர், படகு ஓட்டும் விநாயகர், விநாயகர் திருக்கல்யாணம், செஸ், கிரிக்கெட், கேரம் விளையாடும் விநாயகர் சிலைகள், முருகன், பார்வதியுடன் பல்வேறு வாகனங்களில் செல்லும் விநாயகர் சிலைகள், வனத்தில் இருக்கும் விநாயகர் என பல்வேறு வகைகளில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள், விநாயகரின் அபூர்வ புகைபடங்கள், வெளிநாடுகளில் உள்ள விநாயகர் கோவில்கள் படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.