குரோம்பேட்டை ராதா நகர் அனுமார் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. காலை 10 மணி அளவில் வேத விற்பனர்களும் பட்டாச்சாரியார்களும் விமான கோபுரங்களுக்கு கலச புனித நீர் ஊற்றப்பட்டு ஆலயத்தில் அமைந்திருக்கும் பரிவார மூர்த்தி களுக்கும் புனித கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாதாரனை செய்தனர். இந்நிகழ்வில் சுற்று வட்டாரத்திலிருந்து திறனான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி, மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, அதிமுக முன்னாள் எம்பி மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன்,பல்லவபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப. தன்சிங்.முன்னாள் நகர மன்ற துணைத் தலைவருமான பகுதி செயலாளருமான த.ஜெயபிரகாஷ்.தாம்பரம் மாமன்ற உறுப்பினர்கள் ஆர் .எஸ் .செந்தில்குமார், அ கிருஷ்ணமூர்த்தி, அஸ்தினாபுரம் பகுதி செயலாளர் அருணாச்சலம் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிவ பக்தர்கள் செண்டை மேளம் முழங்க இசைக்கேற்ப நடனம் ஆடியது அப்பகுதி மக்கள் கண்டு களித்து ரசித்தனர். விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை எஸ்.ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வி.கோதண்டபாணி பாவாயி கே. மாரிமுத்து. எஸ்.மீனாட்சிசுந்தரம். கே .எஸ்.சௌமியநாராயணன். ஆர்.ஜே.முருகன். ஜி. ரவிக்குமார் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.