குரோம்பேட்டை நடேசன் நகர் தாலுகா ஆபிஸ் அருகே கடந்த 10 ஆண்டுகளாக மழை நீர் கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 23, நடேசன் நகர் பகுதி.
இங்கு இருந்த மழைநீர்கால்வாய் கடந்த 10 ஆண்டாக மறைந்து விட்டது. இதனால் இப்பகுதி மக்கள் ஒவ்வொரு துயரங்களை அனுபவிக்கிறார்கள்.
அப்பகுதி நலச்சங்கம், இணைப்புமையம் எடுத்த எந்த முயற்சிக்கும் மாநகராட்சி சார்பில் முறையான நடவடிக்கை இல்லை..
அதிகாரிகள் வந்து பார்ப்பதும், நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்வதும் தொடர் நிகழ்வாக உள்ளது. ஆனால் பிரச்சினைக்கு முடிவு கிடைக்கவில்லை.
இந்த ஆண்டும் அதே நிலை நீடித்து வருகிறது. இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இந்த பகுதி மக்கள் மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளனர் என்று நடேசன் நகரை சேர்ந்த லட்சுமி நாராயணன் பொதுமக்கள் சார்பாக தெரிவித்தார்.