
பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் தாம்பரம் மத்திய பகுதி கழகச் செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தாம்பரம் சண்முகம் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்பு அங்கிருந்து அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.
பின்பு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்திற்கு பேரணியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் நிர்வாகிகளும் தொண்டர்களும் வந்தனர். அங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா, பகுதி கழகச் செயலாளர்கள் கூத்தன், கோபிநாதன், மகளிர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்