அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் மரியாதை நிமித்தமாக டெல்லியில் கிருஷ்ணன் மேனன்மார்க் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களுடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அந்த சந்திப்பின்போது ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் தெரிவிக்குமாறு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.