வரும் 19-ஆம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அமேசான் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில், மத்திய அரசு நிர்ணயித்த கால அவகாசம் வரும் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், இணைய வழி பொருட்கள் விநியோக நிறுவனமான அமேசான் அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் ”அமேசான் தற்போது வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொண்டு வருகிறது.

இருப்பினும், வரும் 19-ஆம் தேதிக்கு பிறகு அமேசான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பணம் கொடுத்து பொருட்களை டெலிவரி பெறும் வாடிக்கையாளர்களிடம் ஏற்றுக்கொள்ளாது” என்று அறிவித்துள்ளது.