சென்னை காக்கா தோப்பு பாலாஜியின் கூலிப்படை சேர்ந்தவர் ஜங்கிலி கணேசன்.
இவர் நேற்று முன்தினம் இரவு சூளையில் உள்ள அங்காள அம்மன் குடிசை பகுதி தெருவில் கத்தியுடன் வந்துள்ளார். அப்போது அங்கு விநாயகர் சிலை அமைக்கும் பணியில் இருந்த ஸ்பதிகள் பார்க்க பாரத் இந்து முன்னணி தலைவர் ஆர்.டி.பிரபு மற்றும் நிர்வாகிகள் இருந்த போது ஆர்.டி.பிரபுவை நோக்கி வந்து தகாத வார்தைகள் கூறி கத்தியை எடுத்து குத்தினால் நீ காலி. எனக்கு ஜெயில் ஒன்றும் புதிது அல்ல என மிரட்டவே அங்கு இருந்த நிர்வாகிகள் சத்தம் போட்டனர். உடனே, அவன் கத்தியை காட்டிக் கொண்டே மிரட்டி சென்றான். கூலிப்படை மூலம் இவனை ஏவியது காரணமாக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஜங்கிலி கணேசனை சிறையில் அடைத்தனர்.
ஜங்கிலி கணேசன் உள்நோக்கத்துடன் வந்து மாநிலத் தலைவரை கத்தியை காட்டி மிரட்டியதால் பாரத் இந்து முன்னணி தொண்டர்கள் இடையே பரபரப்பு நிலவியது.