மதுரையில் இருந்து சென்னை நோக்கி அரசு எஸ்.இ.டிசி சொகுசு பேருந்தானது சென்று கொண்டிருந்தது. அப்பொழுது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருக்கும்போது அதே மார்க்கமாக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று அரசு பஸ் மீது மோதிவிட்டு அங்கிருந்து சென்றது. இதில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சந்திரகாசன், காஞ்சிபுரம் மாவட்டம் இடையான்புதூர் பகுதியை சேர்ந்த நடத்துனர் ஜெயசீலன் மற்றும் பயணிகள் மூன்று பேருக்கு காயங்கள் ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற கண்டெய்னர் லாரியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.