தாம்பரம் அருகே நேற்று பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றினால் வங்கி சுவர் இடிந்து செக்யூரிட்டி மீது விழுந்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு மேலும் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் இது குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்து

குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (64) சிட்லப்பாக்கம் ராகவேந்திரா தெருவில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார்,

நேற்று இரவு வழக்கம் போல் பணியில் இருந்த போது தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்து வந்ததால் வங்கியின் மேல் தளத்த்தில் இருந்த கைப்பிடி சுவறு இடிந்து சுந்தர்ராஜன் மீது விழுந்தது .இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

அங்கு சிகிச்சை பெற்று வந்த சுந்தர்ராஜன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .மேலும் வங்கியில் மழைககாக ஒதிங்கிய இருவர் வெளியில் வர முயன்ற போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.