தாம்பரம் மாநகராட்சி 3 ஆவது மண்டலத்திற்கு உட்பட்ட 34 ஆவது வார்டு SBI காலனி பகுதியில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் 40 ஆவது வார்டு செம்பாக்கம் அம்பேத்கர் நகரில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் 42 ஆவது வார்டு ராஜகீழ்ப்பக்கம் மாருதி நகர் பகுதியில் ரூ .10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை ஆகிய இம்மூன்று கடைகளும் ,தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக கழக நாடாளுமன்ற குழு தலைவர் திருப்பெரும்பதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி .ஆர்.பாலு எம் .பி ,புதிய நியாய விலை கடைகளை திறந்து வைத்து பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா மற்றும் மண்டல குழு தலைவர்கள் டி .காமராஜ் ,ஜெயபிரதீப் சந்திரன் ,மாமன்ற உறுப்பினர்கள் சி.ஜெகன் ச.கிரிஜா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .