சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மே மாதம் அன்று

சென்னை பிரபல மருத்துவமனையைச் சேர்ந்த மக்கள் தொடர்பு மேலாளர் அளித்த புகாரின் பேரில்

தங்களது தனியார் மருத்துவமனையின் இணைதளத்தை போன்று போலியான இணையதளத்தை உருவாக்கி கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளதாகவும்

போலி இணையதளத்தில் உடல் உறுப்புகள் விற்று தருவதாக போலி விளம்பரங்கள் செய்து வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருந்தார்

பின்னர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப்ராய் ரத்தோர். இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில்,

தெற்கு கூடுதல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின் படி
தெற்கு மண்டல இணை ஆணையாளர் சிபி சக்ரவர்த்தி, இ.கா.ப அவர்களின் ஆலோசனையின் பேரில் மீது சென்னை தெற்கு மண்டலம், சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்

சைபர் கிரைம் ரன்போலீசார் முதற்கட்ட விசாரணையில் முகநூல் பக்கத்தில் இணையதளங்களில் ஆள்மாறாட்டம் மோசடி செய்து வந்தது தெரியவந்தது

பின்னர் சைபர் கிரைம் போலீசார் லோக்கேஷன் பார்த்ததில் பெங்களூர் மாநிலம் தெரிந்ததும்

உடனடியாக சென்னை தெற்கு மண்டலம் போலீசார் மற்றும் சைபர் கிரைம் தனிப்படை போலீசார் பெங்களூருக்கு விரைந்து சென்று பனஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கியிருந்தது தெரியவந்ததும் அதிரடியாக தனிப்படை போலீசார்

மோசடியில் ஈடுபட்டு வந்த பெங்களூர் மாநிலங்களில் வெவ்வேறு இடங்களில் உள்ள வீடுகளில் தங்கி இருந்து வந்த நைஜீரியா மற்றும் உகண்டா நாட்டைச் சேர்ந்த 1.ஜெர்மியா பெ/வ-50. த/பெ.ஏமோக்கரே 2.ஒலிவியா, பெ-வ25, த/பெ.ஜேம்ஸ் 3.மோனிகா பெ/வ-59 க/பெ.ஜான்

4.ராம் பகதூர் ரியாங் வ/31, த/பெடாடா ராம் ரியாங் 5.இரோம் ஜேம்சன் சிங் வ/21, த/பெ.இரோம் ஜாய் சிங் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய மொபைல் போன்கள். வங்கி கணக்கு அட்டைகள், மடிக்கணினி, மற்றும் ஹார்டிஸ்க் போன்றவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் சென்னையில் அழைத்து வந்து புலன் விசாரணை செய்ததில் குற்றவாளிகள் இணையதள பக்கங்களில்,

  1. நுரையீரல் சிறுநீரகம் மாற்று உறுப்புகள் தானத்திற்கு 5 கோடி தருவதாகவும்
  2. கருப்பு தாள்களை டாலரில் பணமாக மாற்றி தரும் ராசாயண விற்பனை செய்து வருவதாகவும்
  3. வெளிநாடு உள்ள வாழ்ந்து திருமண வரன் பார்த்து வருவதாகவும்
  4. ஆபாச வீடியோ அழைப்புக்கு பல லட்சம் ரூபாய் அளிக்க உள்ளதாகவும்
  5. பார்சல் சர்வீஸ் மோசடியாகவும்
  6. வெளிநாட்டு ஆடைகள் விற்பனை எனவும் 7.விலை உயர்ந்த மது 🍷 என பல மோசடிகள் செய்து வந்தது தெரியவந்தது

பொது மக்களை ஏமாற்றி பணம் கட்டச்சொல்லி பின்பு மோசடி செய்து ஏமாற்றுவது தெரியவந்தது

இந்திய மக்களின் வங்கி கணக்குகளையும், சிம்கார்டுகளையும் உபயோகித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் பொதுமக்களிடம் எப்படி பேசுவது குறித்தும் முன்பே வாய்ஸ் மற்றும் எழுத்து மூலம்
நோட்ஸ் தயார் நிலையில் செய்து வைத்துக் கொண்டு

பொதுமக்கள் அளிக்கும் கேள்விகளின் பதில் பதிவுகள் மூலமும்

அல்லது கேட்கும் கேள்வி தொடர்பாக பதிலளிக்கும் விதத்தில் எழுத்து உரை தயார் செய்து வைத்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பிறகு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்குப் பின்னர்
(5)குற்றவாளிகளையும் சென்னை எழும்பூர்
கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்க உள்ளனர்

சிறப்பாக பணியாற்றி வந்த சைபர் கிரைம் போலீசார் மற்றும் தெற்கு கூடுதல் ஆணையர் தலைமையில் உள்ள தனிப்படை போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தூர் அவர்கள் பாராட்டினார்