
பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது
ஜனவரி 11ல் பயணம் செய்வோர் நாளையும், ஜனவரி 12ல் பயணம் செய்வோர் நாளை மறுநாளும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஜனவரி 13ம் தேதி பயணம் செய்வோர் செப்டம்பர் 15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி முதல் மற்றும் இரண்டாம் வாரத்தில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான முன்பதிவு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.