மிழக அரசு சார்பில் இறந்தவர்களுக்கு தலா ரூ 1 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் அறிவிப்பு.

வாணியம்பாடி,செப்.11- வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கடந்த 8 ஆம் தேதி 2 வேன்களில் கர்நாடக மாநிலம் தர்மஸ்சாலாவுக்கு சுற்றுல்லா சென்று இன்று காலை சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது வேன் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதி பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது வேன் பஞ்சராகி சாலையில் நின்றது.

இதனை தொடர்ந்து வேன் ஓட்டுநர் வேனை சாலையிலேயே நிறுத்தியிருந்த நிலையில் வேனில் பயணம் செய்தவர்கள் சாலை தடுப்பு அருகில் நின்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது வேகமாக வந்த லாரி பஞ்சராகி நின்று கொண்டிருந்த வேன் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இதனால் வேன் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி எதிர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பகுதி மக்கள் படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உட்பட 14 பேரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி, நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்கள் மீரா (வயது 50), தெய்வானை (வயது 32), சேட்டுயம்மாள், (வயது 50) தேவகி,(வயது 50) சாவித்திரி, (வயது42) கலாவதி, (வயது50) கீதாஞ்சலி (வயது32) என்பது தெரியவந்துள்ளது.

மரணமடைந்த 3 பெண்களின் சடலங்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்ததை தகவல் அறிந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் அரசு சார்பில் இருந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சமும் , படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதாக பேட்டி அளித்தார்.

தொடர்ந்து பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.