தாம்பரம் அடுத்த சானிடோரியம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை அருகே குரோம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும், பெண் காவலர் குமுதா(26), சம்பவ இடத்தில் வாகன நெரிசல் சீர் செய்து கொண்டிருந்தார்,
அப்போது அங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக நெரிசல் இருந்ததால் அங்கு சென்று பார்த்த போது மது போதையில் இருந்த போதை ஆசாமி ஒருவர் கைகளில் ரத்த காயங்களுடன் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்து கொண்டிருந்தார்,
அவரை எச்சரித்து பெண் காவலர், மீண்டும் போக்குவரத்தை சீர் செய்ய பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென அருகில் இருந்த கல்லை எடுத்த அந்த போதை ஆசாமி, பெண் போக்குவரத்து காவலர் தலையில் அடித்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த பெண் காவலரை அவ்வழியே வந்த ஆட்டோ ஓட்டுநர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
இது தொடர்பாக குரோம்பேட்டை காவல் துறையினர் பல்லாவரத்தை சேர்ந்த நாகராஜ்(46), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.