காரைக்குடி வழியாக கடந்த ஜுலை 27 / 2017 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்ட இராமேஸ்வரம் – பைசாபாத் இடையே புதிய ரயில் சேவை துவங்கப்பட்டது. ஆனால் அந்த ரயிலுக்கு காரைக்குடியில் நிறுத்தம் வழங்கப்படவில்லை. இதனால் விஜயவாடா , நாக்பூர் , பிரயாக்ராஜ் , அயோத்தியா போன்ற பகுதிகளுக்கு செல்லும் யாத்திரிகர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். 2017 முதல் 2023 வரை சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய நிலையங்களில் 22613 / 22614 இராமேஸ்வரம் – அயோத்தியா கண்டோன்மெண்ட் – இராமேஸ்வரம் “ஷ்ரத்தா சேது அதிவேக விரைவு ரயில் ” நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

அதன்படி வண்டி எண் : 22613 இந்த ரயிலானது இராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிறு இரவு 11:55 மணிக்கு புறப்படும் ரயிலானது காரைக்குடிக்கு வரும் செப்டம்பர் 24 முதல் திங்கள் தோறும் அதிகாலை 02:58 மணிக்கு நின்று 03:00 மணிக்கு புறப்பட்டு திருச்சி , தஞ்சாவூர் , சென்னை எழும்பூர் , விஜயவாடா , நாக்பூர் , பிராயக்ரஜ் வழியாக அயோத்தியாவிற்கு புதன்கிழமை காலை 04:55 மணிக்கு சென்று சேரும் ….

மறு மார்கத்தில் !!

வண்டி எண் : 22614 இந்த ரயிலானது அயோத்தியாவில் இருந்து செப்டம்பர் 20 முதல் புதன்கிழமைகளில் இரவு 11:10 மணிக்கு புறப்படும் ரயிலானது ப்ராயக்ரஜ் , நாக்பூர் , விஜயவாடா , சென்னை எழும்பூர் , தஞ்சாவூர் வழியாக காரைக்குடிக்கு வெள்ளிக்கிழமைகளில் இரவு 11:08 மணிக்கு நின்று 11:10 மணிக்கு புறப்பட்டு இராமேஸ்வரம் நோக்கி செல்லும் .

இதன்மூலம் காரைக்குடியில் இருந்து நேரடியாக புன்னிய பூமியான அயோத்தியாவிற்கு நேரடியாக செல்ல முடியும் , ராமர் கோவில் மற்றும் விஜயவாடா , நாக்பூர் , ஜபல்பூர் , பிராயக்ரஜ் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும்.

காசி விஸ்வநாதரை தரிசிக்க பிராயக்ரஜ் வரை இந்த ரயிலில் செல்ல முடியும் .

இந்த ரயிலை அதிகளவில் காரைக்குடி பயணிகள் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நிரந்தர நிறுத்தமாக நமக்கு கிடைக்கும். இந்த செய்தி காரைக்குடி மக்களிடையே மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.