மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. உக்ருள் நகரில் இருந்து 66 கிலோ மீட்டர் தென் கிழக்கில், 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாகவும், நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று, அந்தமான் அருகே கடற் பகுதியில் 93 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.40 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 4.4 அலகுகளாக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..