வாணியம்பாடி,செப்.12- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமனூர்தட்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி இந்துமதி.
இவர் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்துமதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனால் பாண்டியன் குடும்பத்துடன் மலைகிராமத்தை விட்டு ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இந்துமதி கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பாததால் பாண்டியன் தன் மனைவி காணவில்லை என்று ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரை பெற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இரவு இந்துமதி தானாக காவல் நிலையத்திற்கு வருகை தான் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பிரச்சனை தொடர்பான விவகாரத்தில் சில பிரச்சனை தொடர்வதால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதில் மனமுடைந்து வேலூர், திருப்பத்தூர்,தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டு வந்ததாகவும்,
கணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் தொலைக்காட்சிகளில் வந்த செய்தி அறிந்து காவல் நிலையத்துக்கு வந்ததாக காவல் துறையினரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேலும் காவல் நிலையத்தில் சரணடைந்த ஊராட்சி மன்ற தலைவர் இந்து மதியை போலீசார் ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.