டெல்லி: மொராக்கோ நாட்டில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இக்கட்டான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.