சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில் மளிகை, சலூன், ஹர்டுவேர்ஸ், செல்போன் கடைகள் இயங்கி வருகின்றனர்.

நேற்று இரவு வழக்கம் போல் கடைளை பூட்டிவிட்டு சென்ற உரிமையாளர்கள் காலை வந்து பார்த்த போது கடைகளின் பூட்டு உடைக்கப்படிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதில் சலூன் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் வைக்கபட்டிருந்த மூன்றாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் விலையுர்ந்த செல்போன்கள் திருடு போனது தெரியவந்துள்ளது.

மேலும் மளிகை கடையின் சிமெண்ட் சீட்டை உடைக்க முயற்சித்த கொள்ளையர்கள் அதிக சத்தம் கேட்டதால் முயற்ச்சியை கைவிட்டுள்ளனர். இதனால் கடையில் இருந்த மளிகை பொருட்கள் தப்பின.

பின்பு இது குறித்து பீர்க்கன்காரனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் கடைகளில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கைகள் முழுவதும் டாட்டூ குத்தி கொண்டு இருக்கும் மர்ம நபர் திருட்டில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்துள்ளது.

வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு இரும்பு ராடுகளுடன் சுற்றி தெரிந்த மர்ம் நபர்கள் முடிச்சூர் சாலையில் அடுத்து மூன்று கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் வணிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் தொடர் கொள்ளை சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.