மத்திய மற்றும் மாநில காவல் துறையில், குறிப்பாக சி.பி.ஐ,,
அமலாக்கத் துறை, உளவுத் துறை, லஞ்ச ஒழிப்பு துறைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடு, நேர்மையை நிலைநிறுத்த ஒரு சில சட்ட திருத்தங்களை கொண்டு்வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப் பட்டவர்களோடு கைகோர்த்து அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக பதியபடும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், தொடர்புடையை காவல் துறையினர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.
விசாரணை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது என்று குற்றவியல் நடைமுறை சட்டம் மாற்றி அமைக்கப்படும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதன் மூலம் ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து காவல் துறையினர் செயல்படும் நிலை பெறுமளவு மாறும் என்று மத்திய சட்ட வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பரவலான தகவல்?