திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவை சேர்ந்த ஆழ்வார் மகன் அய்யப்பன் (38) என்பவர் நேற்று அவரது வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார். பின்னர் அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.
இதுகுறித்து அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் திருச்செந்தூர் கோவில் வளாகத்தைச் சேர்ந்த வினோத் குமார் (20) என்பவர் அய்யப்பனின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வினோத் குமாரை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 30,000 மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.