
காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் கலை அறிவியல் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டாக்டர் வி.இறையன்பு பங்கேற்று 864 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். கல்லூரி தாளாளர் ஹரிணி ரவி பட்டம் பெற்ற மாணவ, மாணவியரை வாழ்த்தி பேசினார். கல்லூரி முதல்வர் ஆர்.வாசுதேவராஜ் வரவேற்றார். விழாவில் கல்லூரி கல்வி இயக்குனர் எஸ்.ராமசந்திரன், எஸ்ஆர்எம் துணைப்பதிவாளர் அந்தோணி அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் கல்லூரி துணைமுதல்வர் பேராசிரியர் கே.மதியழகன் நன்றி கூறினார்.