நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப்பேரனான சந்திரகுமார் போஸ் கடந்த 2016ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். சந்திரகுமார் போஸுக்கு மேற்கு வங்க பாஜக துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டு தேசிய குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை சந்திரகுமார் போஸ் எடுத்ததால் அவர் 2020ம் ஆண்டு பாஜக துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும் அவர் பாஜகவில் தொடர்ந்து நீடித்து வந்தார்.
இன்று, சந்திரகுமார் போஸ் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். பாஜக மத்திய மற்றும் மாநில தலைமை நேதாஜியின் கொள்கைகளைப் பரப்புவதற்கு ஆதரவு தராததால் கட்சியில் இருந்து விலகுவதாக சந்திரகுமார் போஸ் தெரிவித்துள்ளார்.