சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் லாரி டிரைவரை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் சங்ககிரி சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் லாரியையும், டிரைவரையும் தேடி வந்தனர். கோவை அருகே சாய்பாபா காலனி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதியில் ஜெகன் பாபு லாரியை ஓட்டி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை மடக்கி பிடித்து லாரியை பறிமுதல் செய்து சங்ககிரி போலீஸ் நிலையம் கொண்டு வந்து நிறுத்தினர். இதையடுத்து ஜெகன் பாபு மீது அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்தியது, விபத்து நடக்கும் என்பதை தெரிந்தே வாகனத்தை நிறுத்துவது, விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்யாமல் வாகனத்தை எடுத்து செல்லுதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து ஜெகன் பாபுவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் ஆஸ்பத்திரியில் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றன.