திருவள்ளூர்:சோழவரம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம், நகரிக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் இன்று காலை திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் 50 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரிகளை ஓட்டி வந்த பெருமாள், ஜானகி ராமன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.