பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஜிம் டிரைனர் சூர்யா, இவரின் மனைவியும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி தாய் விட்டிற்கு சென்றார்.

இதனால் மன வேதனையில் மது போதையில் அவர் வீட்டின் மீது ஏறி நின்றி தகராறு செய்துள்ளார்.

இந்த தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் காவல் நிலையம் அழைத்துவந்து அவரின் தகவல்களை கேட்டறிந்த நிலையில் போதையில் இருந்ததால் அனுப்பிவிட்டனர்.

ஆனால் சூர்யா காவல் நிலைய வாளாகத்தை விட்டு வெளியேறாமல் காலை 11 மணியளவில் காவல் நிலைய மூன்றாம் மாடியான மொட்டை மாடிக்கு சென்று தண்ணீர் தொட்டியின் மீதும் ஏரி நின்று குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக போலீசாரை மிரட்டியுள்ளனர்.

இதனால் பரபரப்படை பல்லாவரம் போலீசார் செய்வதரியாது உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளித்த நிலையில் இறங்குமாறு சூர்யாவிடம் கெஞ்சினார்கள் ஆனால் சூர்யா இறங்காமல் தனது இடுப்பில் இருந்த பெல்ட் கழட்டி கழுத்தில் மாட்டிக்கொண்டும் கழுதை கீரிக்கொண்டு தன்னை தானே துன்புறுத்திக்கொண்டார்.

இதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது அவர்களும் கட்டிட கீழ்தளத்தில் வலையை விரித்து காத்து இருந்தனர்.

ஆனாலும் சூர்யா இறங்கவில்லை இதனால் பல்லாவரம் உதவி ஆணையளர் வெங்கட்குமார் சூர்யாவிடம் சைநாக பேச்சு கொடுத்து அடிக்கமாட்டோம் என கூறி கெஞ்சினார்.

ஒரு கட்டத்தில் சமதானமடைந்த சூர்யா 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மனம்மாறி இறங்கினார். அவருக்கு அங்கேயே முதலுதவி சிசிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தொடந்து சூர்யாவிடம் விசாரணை செய்து வருகிறார்கள்…