கேரளாவின் வாகமனில், எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ்

40 மீட்டர் நீளமுடைய இந்த பாலம், ₹3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை ரசிக்க, ஒரு நபருக்கு (10 நிமிடங்கள்) ₹500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 15 சுற்றுலா பயணிகளுக்கு மேல், அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது