சிறை கைதியாக உள்ள செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் அமைச்சராக பதவி வகிக்கிறார் என நீதிமன்றம் விளக்கம் கேட்டு அவர் பதவி வகிக்க தடைவிதிக்க வேண்டும் என முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் சார்பில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கோவாரண்டோ வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

சிறையிலிருப்பவர் அமைச்சராக நீடிக்க முடியுமா? அவர் அமைச்சராக சம்பளம் மட்டுமல்ல பல சலுகைகளையும் அலவன்ஸ்களையும் பெறுகிறார். துறையே இல்லாத அமைச்சருக்கு எதற்காக பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக செலவிட வேண்டும்? அமைச்சரை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று வாதிடுகின்றனர்.ஆனால் நீதிமன்றம் தலையிடலாம் என்பதற்கு ஏராளமான முன்உதாரண தீர்ப்புகள் உள்ளது என்று தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது.

இவ் வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டும் அல்லாமல், தார்மீக அடிப்படையிலும் நியாயமானதல்ல! சட்டப்படியும் சரியானதல்ல!

மேலும் சிறையிலிருக்கும் ஒருவர் எப்படி அமைச்சராக தொடர்வது தூய நிர்வாகத்தை எப்படி தரும்?அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதால் எந்த பலனும் இல்லை எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.