தேவையானபொருட்கள்: அரிசிமாவு – 1 கப், உப்பு – 1/2 டீஸ்பூன், நெய் – 1 டீஸ்பூன், சுடுநீர் – 1 கப், பால் – 3 கப், தண்ணீர் – 1 கப், சர்க்கரை – 3/4 கப், தேங்காய்பால் – 1 கப், ஏலக்காய்பொடி – 1 டீஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பௌலில் அரிசிமாவை எடுத்து, உப்பு மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஸ்பூன் பயன்படுத்தி கிளறி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் கைகளால் மாவை நன்கு மென்மையாக பிசைய வேண்டும். பின்பு கையில் நெய்யைத் தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி ஒருதட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு 8-10 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். பாலானது சுண்டி, கொழுக்கட்டை வெந்ததும், சர்க்கரையை சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து அதில் தேங்காய்பாலை ஊற்றி, ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான பால் கொழுக்கட்டை தயார்.