தேவையானவை : கொத்துக்கறி – ஒருகப், பாசுமதி அரிசி–2 கப்,
உப்பு–தேவையானஅளவு தாளிக்க: பட்டை, கிராம்பு, பிரியாணி இலை,
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், புதினா, மல்லி – கால்கப், கரம் மசாலாத்தூள்–ஒருடீஸ்பூன்,
நெய், எண்ணெய்–தலா 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது–2 டீஸ்பூன், மிளகாய்த்தூள்–2 டீஸ்பூன், வெங்காயம், தக்காளி–தலா 1, உப்பு–தேவையானஅளவு செய்முறை : ஒரு பாத்திரத்தில் சாதத்தை முக்கால் பதத்தில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். கொத்துக்கறியை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் ஒருவிசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். வேறு பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டுபட்டை, கிராம்பு, பிரியாணிஇலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டுவிழுது சேர்த்து வதக்கி கொள்ளவும். இதனுடன் மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், வேகவைத்த கொத்துக்கறி, உப்பு சேர்த்துக் கிளறவும். தண்ணீர் வற்றி வரும் போது சாதம், புதினா, மல்லி சேர்த்துக்கிளறி, குறைந்ததீயில் 10 நிமிடம் மூடி வைத்து சமைக்கவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, வறுத்த முந்திரி தூவி அலங்கரித்து பரிமாறவும்.