புழல் சிறையில் உள்ள ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் ஆல்வின் அறையிலிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா விநியோகம் செய்ததாக சிறைகாலவர் திருமலை நம்பிராஜா சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உத்தரவு அளித்துள்ளது. கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வாங்கிய 6 புழல் சிறை கைதிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறை காவலர் திருமலை நம்பி ராஜா என்பவர் சிறை கைதிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்தது கண்டுபிடித்துள்ளனர்.