பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான செல்லமுத்து என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. தொட்டம்பட்டி என்ற இடத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை காட்டுவதாக கூறிவிட்டு செல்லமுத்து தப்பிக்க முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.