அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர், 02.09.2023 தேதியிட்ட அறிவிக்கைகளின் மூலம், பின் வருபவர்களை உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் / கூடுதல் நீதிபதிகளாக நியமித்து்ளனர்.
வழக்கறிஞர் திரு. சிபோ சங்கர் மிஸ்ரா, ஒரிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
ஜேஓ (Judicial Officer) திரு. ஆனந்த சந்திர பெஹெரா, ஒரிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
ஜேஓ (Judicial Officer) திரு புடி ஹபுங், குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
கேரள உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி சுதா, கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.