
சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை சுக்ரியா (20)இவர் ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந் நிலையில் கடந்த நான்கு மாதமாக கார்த்ததிக் மற்ற திருநங்கைகளுடன் பழகி வந்ததால் அவரின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் சுகிரியா தொடர்பை நிறுத்தி வைத்துள்ளார்.
நேற்று இரவு தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் சுங்கசாவடியில் நின்றிருந்த சுக்ரியாவை காண்பதற்கு வந்த கார்த்திக் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்பு ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் வைத்திருந்த சிறிய கத்தியால் சுக்ரியாவின் வாயில் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சுக்ரியாவை மிட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் என்பதால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சோமமங்கலம் போலீசார் இன்று காலை குன்றத்தூர் பகுதியில் சுற்றி தெரிந்த கார்த்திக்கை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.