செப்.,18 முதல் 22 வரை நடைபெற உள்ள பார்லி., சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என பெயர் மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை உருவாக்கினார். ஒரு நாட்டின் பெயரை கூட்டணிக்கு வைத்துள்ளதற்கு பா.ஜ., கட்சி மற்றும் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில், இந்தியா என்ற நாட்டின் பெயரை ‘பாரத்’ என மாற்ற வேண்டும் எனவும் பலரும் குரல் கொடுத்து வந்தனர். சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் எனவும் பேசியிருந்தார்.

இந்த நிலையில், செப்.,18 முதல் 22 வரை நடைபெற உள்ள பார்லி., சிறப்பு கூட்டத் தொடரின்போது இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.