தாம்பரம் அடுத்த முடிச்சூரில் பால் கடை நடத்திவருபவர் ஜெயபிரகாஷ் நேற்று வழக்கம் போல் கடையை மூடி சென்ற நிலையில் அதிகாலை கடை திறக்க வந்த போது ஷட்டர் உடைத்து கடையில் கல்லாவ இருந்த 15 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

பக்கத்தில் உள்ள செல்போன் கடையில் வெளியில் ஒரு பூட்டை உடைத்த நிலையில் மற்ற பூட்டுகளை உடைக்க முடியாமல் விட்டு சென்றதால் 3 லட்சம் மதிப்புள்ள புதிய செல்போன் மற்றும் பல்வேறு பொருட்கள் தப்பின.

அதே சாலையில் அரை கி.மீ தூரம் தாண்டி சந்திரசேகரன் என்பவரின் தன் வந்தரி நாட்டு மருத்துகடையில் கடினமான ஷட்டரை இலகுவாக உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவை தட்டிவிட்டி கல்லாவில் இருந்த 10 ஆயிரம் பணத்தை மட்டும் திருடி சென்றனர்.

சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீசார் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தடயங்களை பதிவு செய்து விசாரனை செய்துவருகிறார்கள்.

இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சியில் மூன்று பேர் பெரிய இரும்பு கம்பியை கொண்டு பூட்டுகளை உடைத்தும் இரும்பு ஷட்டர்களை எளிதில் திறக்கும் விதமாக செயல்பட்டது அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சியில் பதிவானது
இதன் சிசிடிவி காட்சிகளை வணிகர்கள் வாட் ஆப் குழுவில் பதிவிட்டு தங்களின் அச்சத்தையும் பாதுகாப்பை உறுதி செய்திட கேட்டுகொண்டனர்.