செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட பெருங்களத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பின்னர் 130 பள்ளி மாணவ மாணவிகள் விலையில்லா மிதிவண்டிங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ் , பெருங்களத்தூர் எஸ்.சேகர், மாமன்ற உறுப்பினர் புகழேந்தி, கமலாசேகர், பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.