சென்னை பல்லாவரம் அடுத்த அனாகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் இவர் நேற்று மாலை தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்க்கு திரும்பி கொண்டிருந்த போது பம்மல் பிரதான சாலையில் திடிரென வாகனம் நின்றுள்ளது.

மீண்டும் வாகனத்தை இயக்க முயன்ற போது திடிரென வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டீபன் தனது குழந்தைகளுடன் வாகனத்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்தில் தீபற்றி எரியத் தொடங்கியது.

இதனை கண்ட கடைகளில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அனைத்தனர் இருப்பினும் இருசக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமானது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் பம்மல் பிரதான சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனம் தீபற்றி எரியும் காட்சிகளை அப்பகுதி மக்கள் வீடியோ பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் பதிவிட்டது வேகமாக பரவி வருகிறது.