புனித தோமையார்மலை ஒன்றியம் திருவஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட பரந்தாமன் தெரு, முத்தாலம்மன் கோவில் தெருவில் புதிய சாலை அமைத்து தர வேண்டும் எனவும், வேம்புலி அம்மன் கோவில் தெருவில் மழை நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் பரந்தாமன் தெரு, முத்தாலம்மன் கோவில் தெருவில் புதிய சாலை அமைக்கும் பணி, வேம்புலி அம்மன் கோவில் தெருவில் ரூபாய் 12.6 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி என மொத்தம் ரூபாய் 33.6 லட்சம் மதிப்பிலான பணிகளை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரதி ராஜன், துணைத் தலைவர் பிரசாத், திருவஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி சுரேஷ்பாபு, ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.