தாம்பரத்தில் விமானப் படைத்தளம் உள்ளது. இங்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஆனால் இப்போது மத்திய அரசு பொதுமக்கள் உள்ளே சென்று பார்வையிட அனுமதி வழங்கி உள்ளது. ஒரு ஓடு தளத்தை தனியார் பயிற்சி விமானிகள் பயன்படுத்த அனுமதிக்க உள்ளனர். மேலும் இங்கு ஒரு குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சுற்றி சாலைகளும் பொதுமக்கள் கூடியிருந்து ஓய்வெடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் தனிப்பட்ட குழுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க உள்ளனர். பழைய ராணுவ விமானங்களை இங்கு கொண்டு வந்து நிறுத்தி காட்சிப்படுத்த உள்ளனர். இதற்கு ஏரோ பார்க் என்று பெயரிட்டுள்ளார்கள், இதற்கும் பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும்.