
தூத்துக்குடி மாவட்டம் விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் கூலிப்படை தாக்கம் அதிகரித்துவிட்டது. குடி பழக்கம் அதிகரித்து விட்டது. இதை எல்லாம் அரசு கவனம் கொள்ள வேண்டும். இதை எல்லாம் கவனம் செலுத்தாமல், இந்தியா பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.
எப்போதுமே நாம் சொல்லுவோம் உள் வீட்டு பிரச்னையை பேசினால் தான் பிரச்னை தீரும். நாட்டில் நிறைய பிரச்னை இருக்கிறது. தமிழகத்தில் கஞ்சா, குடி, அரிவாள் கலாசாரம் என எத்தனை பிரச்னை இருக்கிறது. இதை எல்லாம் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும்.
இந்தியாவுக்கு காக பேச 142 கோடி பேர் உள்ளனர். 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் பிரச்னையை வைத்து ஓட்டு கேட்டால், ஓரு ஓட்டு கூட கிடைக்காது என முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டு உள்ளார். இந்தியா பற்றி பேசுகிறேன். ஹரியானா மற்றும் மணிப்பூர் பற்றி பேசுகிறேன் என ஒரு முதல்வர் கிளம்பி இருக்கிறார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.