தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் பம்மல் சங்கர கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கிவைத்து பேரணியில் கலந்துகொண்டார். இதில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கண் தானம் குறித்து விளம்பர பதாகை கலை கைகளில் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு செம்பாக்கம் முதல் சேலையூர் ஸ்ரீ சங்கர பள்ளி வரை 3 கி.மீ தூரம் பேரணியாக சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க மாவட்ட்ட ஆளுநர் வி.கஜேந்திரபாபு, மண்டல குழு தலைவர்கள் காமராஜ், ஜெயபிரதீப் சந்திரன், இந்திரன்,மாமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்…