
மத்திய பிரதேசம் சத்தீஸ்கர் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஹிந்துத்வாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இந்த மாநிலங்களில் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க. அமைச்சரின் இத்தகைய பேச்சு அந்த மாநிலங்களில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளன.
இது வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் காங்குக்கு எதிராக திரும்பும் என அக்கட்சி தலைவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மஹாராஷ்டிராவின் காங். தலைவர் நானா படோல் ”உதயநிதிக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இது அவரது தனிப்பட்ட கருத்து” என கூறியுள்ளார்.
”இது பற்றி நாங்கள் கருத்தும் கூற முடியாது” எனக்கூறி காங். பொது செயலர் ஜெய்ராம் ரமேஷ் நழுவிக்கொண்டார்.