
குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் மருந்துகள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது இதனால் நீண்ட கியூ வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது பயிற்சி மாணவர்கள் மாத்திரைகளை முறையாக வழங்கவில்லை எனவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் அதிகாரிகள் இன்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
அரசு மருத்துவமனையில் மருந்துகள் வழங்கும் பகுதியை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் எழுதி தரும் மருந்துகளை மாற்றி வழங்காமல் அவர்கள் எழுதி தரும் மருந்துகளை மட்டுமே வழங்க வேண்டும் நீண்ட நேரம் நோயாளிகளை காக்க வைக்காமல் உடனடியாக மருந்துகளை வழங்க வேண்டும் என மருத்துவமனை ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடமும் குறைகளை கேட்டார்
மகப்பேறு வார்டில் சிகிச்சை பெறும் பெண்களுக்கு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சையில் இருக்கும் இடத்திற்கு சென்று ஊசி போட வேண்டும் அவர்களை அலைக்கழிக்க கூடாது எனவும் டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
மருத்துவமனையில் போதுமான மருந்துகள் உள்ளதாகவும் பொதுமக்களுக்கு உரிய முறையில் மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி தெரிவித்தார்.
மண்டல தலைவர் இ. ஜோசப் அண்ணாதுரை,
தலைமை மருத்துவர் பழனிவேல்.