குரோம்பேட்டை ராதா நகரில் உள்ள ஸ்ரீராம சுப்பிரமணியர் ஆலயத்தில் இருந்து படப்பை துர்க்கை சித்தர் பீடம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றதுடன் கிருஷ்ணமாச்சாரி வசந்த மண்டபத்திற்கு சென்றனர். இந்த ஊர்வலத்தில் ஏபிஜிபி நிர்வாகி கே.வெங்கட்ராமன், லலிதா சகஸ்ரநாம மண்டலி நிர்வாகி திருமதி கே. விஜயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, விழா ஒருங்கிணைப்பாளர் எஸ். மீனாட்சிசுந்தரம் மற்றும் பல்வேறு ஆன்மிக பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.