சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் உதயசந்திரன்,

இருசக்கர வாகனத்தில் பல்வேறு சாகச சாதனைகளை புரிந்த இவர் இருசக்கர வாகன இருக்கையில் தலைகிழாக நின்றவாறு இயக்கி சாதனை புரிய திட்டமிட்டு தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலையில் சாதனை முயற்சியில் ஒரு கி.மீ தூரம் இருகைகளால் இருசக்கர வாகனத்தை பிடித்தவாறு தலைகவசம் அணிந்த நிலையில் தலையை இருக்கையில் வைத்து கால்களை உயரமாக செங்குத்தாக தூக்கியவாறு ஓட்டிசென்றார். குறிப்பிட்ட இலக்கை அடைந்ததால் சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனையாக பதிவுப்செய்து பதங்கமும் பாராட்டு சான்றிதழும் உதய சந்திரனுக்கு வழங்கி கெளரவபடுத்தியது.

ஆபதான இருசக்கர வாகனத்தில் தலைகீழாக சாதனை புரிந்த போது அவரின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் ஆரதழுவி வாழ்த்துகளை தெரிவித்தனர்…