சிறுபான்மையினரின் வாக்குக்காகவும், இந்து மதத்திலிருந்து மக்களை சிறுபான்மை மதத்திற்கு மதமாற்றம் செய்யும் முயற்சியினுடைய ஒரு பகுதியாகவும் உதயநிதியின் பேச்சு இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் திராவிடம் இந்து மதத்திற்கு எதிரானது என்ற பாஜவின் குற்றச்சாட்டை உதயநிதி ஸ்டாலின் உறுதிபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
சனாதானம் பெண்களுக்கு எதிரானது என்றால் மற்ற மதங்களில் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கின்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனது வீட்டில் உள்ள பூஜை அறையை கூட உதயநிதியால் ஒழிக்கமுடியவில்லை என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.