“மும்பை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச தனது மகள் பிரனுஷ்கா விருப்பப்படுகிறார்” என அவர் பேசும் வீடியோவுடன் வேணுகோபால் ஐயங்கார் சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்தார். அதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த சிறுமி பிரனுஷ்கா மற்றும் அவரின் பெற்றோரை அழைத்து சந்தித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுவதாகவும், மணிப்பூரில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை தன்னை பாதித்ததாகவும் சிறுமி பிரனுஷ்கா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசும்போது தெரிவித்தார். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுவதும் பரவ பெருமாளை வேண்டுவதாக வேணுகோபால் ஐயங்கார் தெரிவித்தார்.