தூத்துக்குடி புதியம்புத்தூர் அருகே உள்ள ஓசனூத்தை கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோவில்பிள்ளை (வயது 51). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் தனது மனைவி குருவம்மாளின் நகைகளை மளிகை கடை பொருட்கள் வாங்குவதற்காக அடகுவைத்து உள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த கோவில் பிள்ளை நேற்று இரவு உறவினர் ஒருவருக்கு போன் செய்து தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனே உறவினர்கள் கடைக்கு சென்று பார்த்த போது கடையின் மாடியில் மயக்கநிலையில் இருந்த கோவில் பிள்ளையை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.